எம்ஜிஆரின் 109வது பிறந்த நாள் விழா: சிறப்பாக கொண்டாடிய நாமக்கல் மாநகர அதிமுகவினர்!

நாமக்கல்,செலம்பகவுண்டர் பூங்கா அருகில் உள்ள எம்ஜிஆர் முழு உருவச்சிலைக்கு, நாமக்கல் மாநகரப் பகுதி அதிமுக சார்பில் அதிமுக நகர செயலாளரும்,முன்னாள் எம்எல்ஏவுமான கே.பி.பி.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update: 2026-01-17 11:01 GMT
நாமக்கல் மாவட்டத்தில், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கும், உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான புரட்சித்தலைவர், பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில். இதன் ஒரு பகுதியாக நாமக்கல், செலம்பகவுண்டர் பூங்கா அருகில் உள்ள எம்ஜிஆர் முழு உருவச்சிலைக்கு, நாமக்கல் மாநகரப் பகுதி அதிமுக சார்பில் அதிமுக நகர செயலாளரும்,முன்னாள் எம்எல்ஏவுமான கே.பி.பி.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து, நேதாஜி சிலை அருகில் உள்ள மூன்று சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி அங்கு பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது,இந்த நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் மயில் சுதந்திரம், சுரேஷ், கண்ணன்,கார்த்தி, ராஜா,சேகர், ரம்யாசேகர்,ஐடி விங் பாஸ்கர், ராஜேஷ், மணிகண்டன் மற்றும் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News