மத்திய கூட்டுறவு வங்கியில் லாபம் ரூ.11 கோடியே 90 லட்சம்
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடந்த 2024;
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 59வது பொது பேரவை கூட்டம் நேற்று புதன்கிழமை தர்மபுரியில் நடந்தது. பேரவை கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளரும் முதன்மை வருவாய் அலுவலருமான பிரேம் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் கருணாகரன் நிர்வாக அறிக்கை வாசித்தார்.தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடந்த 2024&2025ம் ஆண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.11. 90 கோடி ஆகும் என பொது பேரவையில் பரிந்துரை செய்யப்பட்டது. இறுதியில் நிர்வாக பிரிவு உதவி பொதுமேலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.