தொழிற்சங்கங்கள் பிப்.12 மறியல் விழிப்புணர்வு பிரச்சாரம்
அனைக்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்.12ல் மறியல் நடப்பதையொட்டி குமாரபாளையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.;
அனைக்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்.12ல் மறியல் நடப்பதையொட்டி குமாரபாளையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.அனைக்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்.12ல் மறியல் நடப்பதையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் குமாரபாளையத்தில் .நடத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பாலுசாமி, தனபால், அருள் ஆறுமுகம், சண்முகம் உள்பட பலர் பங்கேற்று பேசினர். இதில் தொழிலாளர் சட்டத தொகுப்பு அமுல்படுத்துவதாக 2025, நவ. 21ல் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப்பெறு, 12 ஆண்டுகாலமாக நடத்தாத தொழிலாளர் மாநாட்டை நடத்து, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, சீரழிப்பதை கைவிடு, கார்பரேட் கம்பெனிகளிடம் விவசாயத்தை அடகு வைக்கும் சட்டத்தை திரும்ப பெறு, என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைகள் வலியுறுத்தப் பட்டது. பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு, ராஜம் தியேட்டர், கத்தேரி பிரிவு, காவேரி நகர் உள்பட பல இடங்களில் இந்த விழிப்புனர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.