எடப்பாடி பழனிச்சாமி 120 தொகுதிகளில் போட்டியிட ரூ.18 லட்சம் செலுத்தி விருப்ப மனு கொடுத்த ஆரணி ஒன்றிய செயலாளர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 120 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் ரூபாய் 18 லட்சம் வரைவோலை செலுத்தி விருப்ப மனு கொடுத்தார்.;
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 120 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான வரைவோலை செலுத்தி விருப்ப மனு கொடுத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 120 தொகுதிகளில் போட்டியிட ஆரணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.15ஆயிரம் என 120 தொகுதிகளுக்கு ரூ.18 லட்சம் பணத்திற்கு உண்டான வரைவோலை செலுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருப்ப மனு கொடுத்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பாபு, ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், மாவட்ட துணைச் செயலாளர் சேவூர் ஜெ.சம்பத், மாவட்ட இணைச் செயலாளர் வனிதா சதீஷ், ஒன்றிய நிர்வாகிகள் சித்தேரி ஜெகன், பையூர் சரவணன், இரும்பேடு வேலு, ஜெ பேரவை ஒன்றிய செயலாளர் செந்தில், மீனவரணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், எஸ்.எல்.எஸ்.மில் சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் சுதாகுமார், பாரதிராஜா, விநாயகம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.