கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் உட்பட, 13 வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Dindigul;

Update: 2026-01-24 01:23 GMT
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சில நாட்களுக்கு முன், கொடைக்கானல், சென்பகனுாரில் நகராட்சி குப்பை கிடங்கில் இருந்த குப்பை, வனப்பகுதியில் கொட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில், மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார்மீனா நகராட்சி அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில், இப்பகுதிக்கான மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, சென்னை வண்டலுார் வன உயிரின உயர் ஆராய்ச்சி மைய துணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தவிர, தலைமை வனப்பாதுகாவலர்கள், துணை இயக்குநர்கள் நிலையில், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு பிறப்பித்துள்ளார்.

Similar News