அரசு கல்லூரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவியதன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவியதன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையின் சார்பில் போட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2026-01-06 12:37 GMT

 இரு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறை தலைவருமான முனைவர் ஞா. கலையரசி வரவேற்புரையாற்ற கல்லூரி முதல்வர் முனைவர் தி. பாரதி தலைமை உரையாற்றறினார். இந்நிகழ்வில் ,வேலூர் கந்தசாமி கண்டார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் இரா .விமல்ராஜ் , நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறை தலைவருமான முனைவர் பி. கந்தசாமி , நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர், வரலாற்று துறைத் தலைவர் (மு.கூ.பொ) முனைவர் க.சந்திரசேகரன் , இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியர் தமிழாய்வுத்துறை முனைவர் க. செல்வராஜ் , இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் இரா.ரம்யாமகேஸ்வரி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முது நிலைத் தமிழாசிரியர்  செ .செந்தில்குமார், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மா.வசந்தகுமாரி , நாமக்கல் தமிழ் வளர்ச்சி துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் ,கண்காணிப்பு குழு 'கலைமாமணி' பேராசிரியர் முனைவர் அரசு பரமேஸ்வரன், ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்றறினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர் களுக்கு பரிசு தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது . நிறைவாக தமிழ்த் துறை கௌரவ விரிவுரையாளர் மு தேன்மொழி நன்றி உரையாற்றினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் மொ. ரவி, தமிழ்த் துறை பேராசிரியர்கள் முனைவர் மு. ஜமுனா,   ந. பூங்கோதை , முனைவர் அ. மோகனா , செல்வி க.மினா , மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணாக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

Similar News