கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் ரூ.1.44 கோடியில் புதிய திட்ட பணி

எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்;

Update: 2026-02-12 08:28 GMT
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் அங்காளம்மன் கோவில் முதல் மேலஅக்ரஹாரம் கிழக்குத்தெரு வரை, பேரூராட்சி அலுவலகம் முதல் ரைஸ்மில் வரை, கீழ அக்ரஹாரம் மேற்கு முதல் கிழக்கு தெரு, கீழ அக்ரஹாரம் கிழக்கு தெரு, கட்டளை வாய்க்கால் முதல் பிச்சம்பட்டி அரிசன காலனிதெற்குபக்கம், வேடர் தெரு அங்கன்வாடி முதல் வேடர் தெரு சாலை வரை, கோவக்குளம் குடித்தெரு குறுக்கு சாலை 1, கோவக்குளம் காலனி முதல் ப.ஜெ. புரம் சாலை வாரிக்கரை வரை, கோவக்குளம் காலனி முதல் ப.ஜெ.புரம் சாலை வரை, கோவக்குளம் முதல் மயான சாலைவரை தார் சாலைகள் பலப்படுத் துதல் பணிக்கும், மற்றும் 2024-25ம் ஆண்டு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் வார்டு எண் 2ல் அரசவள்ளி மாரியம்மன் கோவில் தென்கரை வாய்க்காலில் பெண்களுக்கு படித்துறை அமைத்தல் பணிக்கும் எம்எல்ஏ சிவகாமசுந்தரிஅடிக்கல் நாட்டினார்

Similar News