வத்தலகுண்டு-ல் நட்பாக பழகி வீட்டு சாவியை திருடி வீட்டிற்குள் புகுந்து 15 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் இளம் பெண் கைது
Dindigul;
திண்டுக்கல், வத்தலக்குண்டுவை சேர்ந்த முருகவேல் - செல்வி தம்பதியினர் இருவரும் கணக்கம்பட்டி கோயிலுக்கு சென்ற போது மதுரை திருநகரை சேர்ந்த ஆரோக்கியமேரி அறிமுகமாகி நெருங்கி பழகினார் அப்போது தம்பதியரின் வீட்டு சாவி, பீரோ சாவி, மற்றும் ஆதார் கார்டு ஆகியவை காணவில்லை தொடர்ந்து மாற்று சாவியால் வீட்டைத் திறந்தனர் இந்நிலையில் கேரளாவிற்கு கோவிலுக்கு சென்று விட்டு கடந்த அக்டோபர் 9-ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 15.1/2 தங்க நகையை காணவில்லை இது தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் சார்பு ஆய்வாளர் ஷேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஆரோக்கியமேரியை கைது செய்து அவரிடமிருந்து 15.1/2 பவுன் தங்க நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்