ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம்
போராட்டம்;
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்