தமிழ் இலக்கிய பேரவையின் 15-ம் ஆண்டு துவக்க விழா.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாற்கடல் ஊராட்சி . இந்த ஊராட்சியில் உள்ள திருப்பாற்கடல் தமிழ் இலக்கிய பேரவையின் 15-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் திருவள்ளுவர் தின விழா நேற்று கொண்டாடப் பட்டது.;
தமிழ் இலக்கிய பேரவையின் 15-ம் ஆண்டு துவக்க விழா. காவேரிப்பாக்கம், ஜன.17: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாற்கடல் ஊராட்சி . இந்த ஊராட்சியில் உள்ள திருப்பாற்கடல் தமிழ் இலக்கிய பேரவையின் 15-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் திருவள்ளுவர் தின விழா நேற்று கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு புலவர் பேரவை மண்டல தலைவரும், தமிழியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான க.தயாளன் தலைமை தாங்கினார். தமிழ் இலக்கியப் பேரவை செயலாளர் கோவி. நடராசன், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தனஞ்செயன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தே.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் இலக்கியப் பேரவை பொருளாளர் ஏழுமலை வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக உதவும் உள்ளங்கள் அமைப்பு தலைவர் சந்திரசேகரன். தமிழ்நாடு எழுத்தாளர் சங்க தலைவர் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பேசுகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ், திருக்குறளைப் பரப்பும் நோக்கில், மாணவர்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்கும் வகையில், ஆண்டு தோறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி, சொற்பொழிவு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்துகின்றன. இந்த போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும். திருக்குறள் அடிப்படை வாழ்க்கைக்கு உதவுகிறது. தற்போது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் அரசின் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். எனவே நமக்கான அறநூலான திருக்குறளை படித்து, அதன் வழியில் நடக்க வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் முயற்சி செய்தால் முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என பேசினர். தொடர்ந்து, மாணவர் களுக்கு பரிசு வழங்கப் பட்டன. இறுதியாக பொரு ளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.