கரூர் மாவட்டத்தில் 158.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 158.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் 158.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காட்டெழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரம் குறித்து இன்று மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 20.00 மில்லி மீட்டரும், அரவக்குறிச்சியில் 16.00 மில்லி மீட்டரும், அணைப்பாளையத்தில் 12.40 மில்லி மீட்டரும், க.பரமத்தியில் 13.40 மில்லி மீட்டரும், குளித்தலையில் 10.00 மில்லி மீட்டரும், தோகைமலையில் 15.20 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 16.50மில்லி மீட்டரும்,மாயனூரில் 17.00 மில்லி மீட்டரும், பஞ்சபட்டியில் 15.20 மில்லி மீட்டர்,கடவூரில் 9.00மில்லி மீட்டரும், பால விடுதியில் 11.00 மில்லி மீட்டரும், மைலம்பட்டியில் 3.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் 158.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது எனவும், இதனுடைய சராசரி அளவு 13.23 மில்லி மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.