வேடசந்தூரில் டெய்லருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - 16 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது

Dindigul;

Update: 2026-01-27 03:22 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(58) இவர் வேடசந்தூர், கடைவீதியில் தையல் கடை நடத்தி வருகிறார் இந்நிலையில், நாகம்பட்டியில் பொங்கல் அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இளைஞர்களை அமைதியாக இருக்கும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேர் முகமூடி அணிந்து வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த மாரிமுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன்மூர்த்தி சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News