திண்டுக்கல்லில் 17 வயது சிறுமியை கடத்தி வந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
Dindigul;
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த முகமதுஇஸ்மாயில்(25) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தியதாக சிறுமியின் பெற்றோர்கள் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி, சார்பு ஆய்வாளர் சரோஜினி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு முகமதுஇஸ்மாயில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது இஸ்மாயிலை தேடி வருகின்றனர்