புதுக்கோட்டை: அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன் னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக முதன்மை சப் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கு நீதிபதி கிரிஜா ராணி முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜரா கவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தர விட்டார்.