சந்தைப்பேட்டையில் 18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் 18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக வாரச் சந்தை நடைபெற்று வருவது வழக்கம். மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த வார சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் டிசம்பர் 29 இன்று காலை கூடிய வார சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ஆடுகளின் ரகம் மற்றும் தரத்தைப் பொறுத்து 2000 ரூபாய் முதல் 24,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் 18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.