காடையாம்பட்டி பேரூராட்சியில் ரூ.18 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி

மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;

Update: 2025-07-14 03:24 GMT
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு கரட்டு கொட்டாய் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் ேமல்நிலை நீர்த்தேக்க தொட்ட மணி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து ஓமலூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. காடையாம்பட்டி நகர செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சித்தேஸ்வரன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 1-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி வரவேற்றார். மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

Similar News