ராசிபுரம் அருகே 18 ஊராட்சியை சேர்ந்த 7237 மகளிர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அடையாள அட்டை எம்பி, அமைச்சர் பங்கேற்று வழங்கினர்..

ராசிபுரம் அருகே 18 ஊராட்சியை சேர்ந்த 7237 மகளிர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அடையாள அட்டை எம்பி, அமைச்சர் பங்கேற்று வழங்கினர்..;

Update: 2026-02-11 14:59 GMT
ராசிபுரம் அருகே 18 ஊராட்சியை சேர்ந்த 7237 மகளிர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அடையாள அட்டைகளை MP ராஜேஷ் குமார்,அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் வழங்கி மற்றும் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட உரம்பு,ராஜபாளையம், மற்றும் மலையாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 18 ஊராட்சி பகுதிகளில் மகளிர் சுயஉதவிகுழுகளுக்கு அடையாள அட்டை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநிலங்களவை உறுப்பினர் KRN. ராஜேஷ் குமார் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனை திட்டங்களை முன்னிறுத்தி பேசினார்.தொடர்ந்து 18 ஊராட்சிகளில் உள்ள சுமார் 7237 மகளிர்களுக்கு, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அடையாள அட்டையை MP மற்றும் அமைச்சர் வழங்கினர். தொடர்ந்து மூலக்குறிச்சி ஊராட்சி பகுதியில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் புதிய கிராம அறிவு மையக் கட்டிடம் மற்றும் பல்நோக்கு மையக் கட்டத்திற்கும், மற்றும் ராசிபுரம் ஒன்றியம் சிங்களந்துபுரம் பகுதியில் ரூ.1. கோடி மதிப்பீட்டிலும் புதிய கிராம அறிவு மையத்திற்கு MP ராஜேஷ் குமார் மற்றும் மதிவேந்தன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Similar News