புலித்தாங்கல் கிராமத்தில் நாகலம்மன் ஆலயம் மற்றும் 19 அடி ஸ்ரீ பாலமுருகன் சிலை மகா கும்பாபிஷேக விழா
இராணிப்பேட்டை பிப்.02- வாலாஜா டோல்கேட் அருகே புலித்தாங்கல் கிராமத்தில் நாகாலம்மன் ஆலயம் மற்றும் 19 அடி ஸ்ரீ பாலமுருகன் சிலை மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கணபதி ஹோமம், கோபூஜை, நவகிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், 108 மூலிகை ஹோமம், ஸ்வாமிகளுக்கு காப்பு கட்டுதல்;
இராணிப்பேட்டை பிப்.02- வாலாஜா டோல்கேட் அருகே புலித்தாங்கல் கிராமத்தில் நாகாலம்மன் ஆலயம் மற்றும் 19 அடி ஸ்ரீ பாலமுருகன் சிலை மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கணபதி ஹோமம், கோபூஜை, நவகிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், 108 மூலிகை ஹோமம், ஸ்வாமிகளுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் விமானத்திற்கும், மூலவர் சிலை மற்றும் முருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீப ஆராதனையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணா ஆறுமுகம், ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் அர்ச்சனா சுதாகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நளினி சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் நாட்டாமைக்காரர்கள் பரந்தாமன், பாண்டியன், ஆனந்தன் மற்றும் விழா குழுவினர் ஆகியோர் தலைமை பொறுப்பேற்று விழாவை நடத்தினர் இந்நிகழ்வில் ஏராளமான பக்தகோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது