சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 2 சக்கர வாகனங்களை பழுது நீக்கிய ஜெயங்கொண்டம் போலீசார்
ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 2 சக்கர வாகனங்களை பழுது நீக்கி சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரியலூர், ஜன.10 - சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் போலீசார் 2 சக்கர வாகனங்களை பழுது நீக்கி சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு .தீபக் சுவாஜ் உத்தரவின் பேரில் ஜனவரி 2025-சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் போலீசார்கள் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலையான போலீசார் தா.பழூர் சாலை கழுவந்தோண்டி மேம்பாலத்தின் கீழ் விபத்தை தடுக்கவும், எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் 2 சக்கர வாகன ஓட்டிகளுக்கு 2 சக்கர வாகன மெக்கானிக்கைகளை கொண்டு அவ்வழியாக வந்த 2 சக்கர வாகனங்களை நிறுத்தி போலீசார் இலவசமாக பிரேக் செக்கிங் செய்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பின் பக்க டேஞ்சர் லைட் கட்டாயம் எரிய வேண்டும், அவ்வாறு எரியும் பொழுது நமது பின்னால் வரும் வாகனம் முன்னாள் வாகனம் செல்கிறது என்பதை கவனிக்க முடியும், விபத்தை தவிர்க்க முடியும், மேலும் மாட்டு வண்டி டிராக்டர்கள் சைக்கிள்கள் உள்ளிட்டவர்களில் பின் பக்க எதிரொளிப்பு வில்லைகள் (ரிப்ளைஸ்டிக்கர் ),ஒட்டியிருக்க வேண்டும், மேலும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், 2 சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணிக்கக்கூடாது, வாகனத்திற்கான பதிவுச் சான்று, காப்புச் சான்று ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றுகளின் நகல்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும், மேலும் வாகனங்களில் சான்றுகள் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனத்தை செலுத்தினாலும், ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.வாகன பழுது நீக்கத்தின்போது பல இரண்டு சக்கர வாகனங்களில் பிரேக் இல்லாமலும் பின்பக்கம் டேஞ்சர் லைட் இல்லாமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து போலீச இன்ஸ்பெக்டர் ராஜா சம்பந்தப்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களிடம் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.