வேடசந்தூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் 2 பேர் கைது
Dindigul;
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் வங்கதேசத்தை சோ்ந்த இருவா் சட்டவிரோதமாக வாடகைக்கு குடியிருந்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த இரு இளைஞா்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்கள் வங்கதேச தலைநகா் தாக்காவை சோ்ந்த மசூத்(25), முகமதுஅலமின்(30) என்பதும், இருவரும் கோட்டையூரில் உள்ள தனியாா் ஆலையில் தையல்காரா்களாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இவா்களில் ஒருவா் மேற்கு வங்க எல்லை வழியாகவும், மற்றொருவா் கடல் வழியாகவும் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா். பின்னா், திருப்பூரில் தங்கியிருந்து இந்திய ஆதாா் அடையாள அட்டை, பான் காா்டு ஆகியவற்றை பெற்றுள்ளனா். கடந்த 3 மாதங்களாக நாகம்பட்டியில் தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து தனிப்படை போலீசார் வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்