ஆரணி அருகே மொபட்டில் சென்ற பெண்மணியிடம் 2 மர்ம நபர்கள் வழிமறித்து 7 சவரன் தாலி செயின் பறிப்பு.
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியைச் சேர்ந்த இ.பி.நகர் பகுதியில் மொபட்டில் சென்றுகொண்டிருந்த பெண்மணியிடம் செவ்வாய்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் வழிமறித்து 7 சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடினர். இது குறித்து ஆரணி கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன;
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியைச் சேர்ந்த இ.பி.நகர் பகுதியில் மொபட்டில் சென்றுகொண்டிருந்த பெண்மணியிடம் செவ்வாய்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் வழிமறித்து 7 சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடினர். இது குறித்து ஆரணி கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி, இ.பி.நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி ஜெயலட்சுமி(45) என்பவர் செவ்வாய்கிழமை இரவு ஆரணி பகுதியில் உள்ள முருகர் கோவிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரை இரண்டு மர்ம நபர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து ஆரணி-வேலூர் சாலையில் இ.பி.நகர் பகுதியில் இடது பக்கம் திரும்பிய ஜெயலட்சுமியை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஆட்கள் இல்லாத இடத்தில் வழிமறித்து கழுத்தில் அணிந்து இருந்த சுமார் 7 சவரன் தாலி தங்கச் செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் புதன்கிழமை வழக்கு பதிவு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..