வாணியம்பாடியில் திடீரென காற்றுடன் 20 நிமிடம் கொட்டித் தீர்த்த கனமழை...

வாணியம்பாடியில் திடீரென காற்றுடன் 20 நிமிடம் கொட்டித் தீர்த்த கனமழை...;

Update: 2025-07-02 14:15 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திடீரென காற்றுடன் 20 நிமிடம் கொட்டித் தீர்த்த கனமழை... திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டன இந்த நிலையில் வாணியம்பாடி நகர் பகுதியில் திடீரென காற்றுடன் கனமழை பெய்தது இந்த மழையானது, நியூடவுன், பெருமாள் பேட்டை, ஜனதாபுரம், செட்டியப்பனூர், புதூர், கச்சேரி சாலை, பேருந்து நிலையம், நேதாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 நிமிடம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாலை நேரத்தில் பெய்த திடீர் மழையால் பணிக்கு சென்றவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் அவதி அடைந்தனர்.

Similar News