பாண்டுரங்கர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்களுக்கு கொடுக்க 20 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்களுக்கு கொடுக்க 20 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2025-12-26 16:45 GMT
குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிச.29ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. இதையடுத்து பஜனை ஊர்வலம், சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. டிச. 30ல் பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் அதிகாலை 05:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோவிலுக்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்க, 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை, தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன், பாண்டுரங்கர் திருக்கோவில் விழாக்குழுவினர் மற்றும் பலர் செய்து வருகிறார்கள்.

Similar News