நாமக்கல் அருகே பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு, மாநகராட்சி சார்பில் ரூபாய் 20 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு- சின்ன முதலைப்பட்டி பகுதியில், பாதாள சாக்கடை பணிக்காக சுமார் 5 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு அதில் நீரூற்று காணப்பட்டதால், தொழிலாளர்கள் அப்படியே பணிகளை நிறுத்தி வைத்தனர்.;
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி மணிகண்டன் பிரதீப் பிரியா தம்பதியானின் 4 வயது மகன் ரோகித் என்ற சிறுவன், (01.01.2025 மாலை) குழி தோண்டப்பட்டு எடுத்திருக்க அருகே உள்ள தனது தாத்தா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் திடீரென மாயமானதால் அவரது பெற்றோர் உறவினர்கள் பல இடங்களிலும் தேடினார்.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பாதாள சாக்கடை குழுவில் தேங்கி நின்ற தண்ணீரில் தேடி உள்ளனர். அப்போது அங்கு சிறுவன் ரோகித் பிணமாக மூழ்கி இருந்தான்.இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து நாமக்கல் காவல்துறையினர் சிறுவனின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை எடுத்து நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.தொடர்ந்து, பாதாள சாக்கடை குழுவில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு, மாநகராட்சி சார்பில், மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து, ரூ. 20 இலட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி துணை மேயர் செ. பூபதி, ஆணையாளர் சிவக்குமார் வழங்கினர்.இந்த சம்பவம் சின்ன முதலைப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.