த.வெ.க. கட்சியில் இணைந்த 200 பேர்
குமாரபாளையம் த.வெ .க. கட்சி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 200 பேர் இணைந்தனர்.;
குமாரபாளையம் த.வெ .க. கட்சி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டம் வடக்கு நகர செயலர் சோமு, தெற்கு நகர செயலர் சக்திவேல் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சுதீஷ் பங்கேற்று, பூத் கமிட்டி அமைப்பது, ஓட்டுச்சாவடி பணிகள் கையாள்வது, புதிய உறுப்பினர் சேர்க்கை தவறாமல் இணைப்பது, என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூறினார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 200 பேர் த.வெ .க. கட்சியில் இணைந்தனர். இவர்களுக்கு மாவட்ட தலைவர் சுதீஷ், சால்வை அணிவித்து, வாழ்த்துக்கள் கூறி, வரவேற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சாந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பளர் சுதிப் உள்பட பல்பிர் பங்கேற்றனர்.