கரூர் அருகே தனியார் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா. 200 மாணவ, மாணவியருக்கு வழங்கி வாழ்த்து.
கரூர் அருகே தனியார் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா. 200 மாணவ, மாணவியருக்கு வழங்கி வாழ்த்து.;
கரூர் அருகே தனியார் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா. 200 மாணவ, மாணவியருக்கு வழங்கி வாழ்த்து. கரூர் மாவட்டம் தரகம்பட்டி அடுத்த கொள்ளுத்தண்ணிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் இளமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவ–மாணவிகளுக்கு வாழ்க்கை முன்னேற்றம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினருடன் இணைந்து, பட்டப்படிப்பு முடித்த 200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளர் பழனியப்பன், முதல்வர் திருநாவுக்கரசு, பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.