திருச்செங்கோட்டில் சிறிய குழந்தைகளுக்கான கிட்ட தான் ஓட்ட போட்டிகள் நடைபெற்றன இதில் 200க்கும் மேற்பட்டகுழந்தைகள் கலந்து கொண்டனர்

திருச்செங்கோட்டில் சிறிய குழந்தைகளுக்கான கிட்ட தான் ஓட்ட போட்டிகள் நடைபெற்றன இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று ஓடினர் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டது;

Update: 2026-01-25 15:31 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று சிறிய குழந்தைகளுக்கான கிட்டத்தான் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவை பள்ளியின் தாளாளர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார் பெண்கள் பிரிவை ரோஸி வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தனர் திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஓட்டப்போட்டி மகாதேவ வித்யாலயம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்றது இதனை அடுத்து 400 மீட்டர் தூரத்திற்கு கிண்டர் கார்டன் படிக்கும் குழந்தைகள் தாய் தந்தையுடன் ஓடும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மழலைகள் உற்சாகத்துடன் ஓடினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பைகள் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.

Similar News