வெள்ளகோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி. அமைச்சர் சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 6ம் ஆண்டு நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் நான்கு பிரிவுகளில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்;
காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 6ம் ஆண்டு மாரத்தான் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாரத்தான் போட்டியானது முத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கி 3.5 கிலோமீட்டர் 5.5 கிலோ மீட்டரில் 10.5 கிலோமீட்டர் 21.6 கிலோமீட்டர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. 6 வயது சிறுவர் சிறுமியர்கள் உட்பட 80 வயது முதியவர்கள் வரை 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியின் தூரத்தை கடப்பவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு மொத்தம் ரூ. 2.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. வெள்ளகோவில் நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியால் வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விழாக்கோலமாக காட்சியளிக்கின்றது. மாரத்தான் போட்டி நடைபெறும் சாலைகளில் வெள்ளகோவில் காவல்துறை மற்றும் காங்கேயம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போட்டியை துவக்கி வைக்க வெள்ளகோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், அதிமுக நகர செயலாளர் டீலக்ஸ் மணி,வெள்ளகோவில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், திருப்பூர் மாவட்ட அதிமுக ஐடி விங் மாவட்ட பொறுப்பாளர் அருண்குமார், திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், நகர செயலாளர் சபரி முருகானந்தம், அரசு வழக்கறிஞர் முருகேசன், காங்கேயம் வட்டாட்சியர் தங்கவேல்,கோவை ராயல் கேர் மருத்துவமனை மருத்துவர் பால்வண்ணன், வெள்ளகோவில் பாலா பள்ளி தாளாளர் ராஜா, சிவசக்தி பிரதர்ஸ் குரூப் ஆப் கம்பெனி மகேந்திரகுமார், கோவை மஹாவிர்ஷ் நிர்வாக இயக்குனர் அசோக் ஜெயின், வஞ்சியம்மன் பள்ளி தாளாளர் பிரதீப் முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த மாரத்தான் போட்டியை வழிநெடுகிலும் கண்டுகளித்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.