நாமக்கல் மாவட்டத்தில் 2,000 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50.00 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் தகவல்.;

Update: 2025-09-20 11:13 GMT
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம், சி.எம்.எஸ். பொறியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமினை தொடங்கி வைத்து, 161 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.14.23 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்டத்திற்கு கல்விக் கடனாக 2000 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50.00 கோடி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கினை அடைய நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து கல்விக்கடன் முகாம்களை கிராம ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும் ஆகஸ்ட் மாதம் முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் இராசிபுரம் வட்டார அளவில் அனைத்து இ-சேவை மைய பணியாளர்களுக்கு www.vidyalakshmi.com என்ற இணையத்தில் எவ்வாறு கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது என்று பயிற்சி அளிக்கப்பட்டு, 30.08.2025 அன்று இராசிபுரம் வட்டாரத்தில் உள்ள 20 கிராம ஊராட்சிகளில் கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, www.vidyalakshmi.com இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 161 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.14.23 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முகாமில் கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் புதிதாக கல்விக்கடன் பெற ஏதுவாக விண்ணப்பங்களை www.vidyalakshmi.com இணையத்தில் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கல்வி கடன் என்பது குறித்தும், அதனை முறையாக செலுத்துவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கடன் என்பது உங்களை வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. வங்கி கடனை திரும்ப செலுத்துவது காலதாமதமானால், உங்களது சிபில் ஸ்கோர் என்பது பாதிக்கப்படும். கல்வியை நாம் தொடர்ந்து பயிலுவதற்கு வங்கி கடன் பெறவேண்டும் என்றால் அதனை முறையாக செலுத்த வேண்டும் என்ற கடமை நமக்கு உள்ளது. இதனால் உங்களது மதிப்பாய்வும் உயரும். மேலும் அடுத்தகட்டமாக நீங்கள் பெறக்கூடிய வீட்டுகடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளை பெறுவது எளிதாக இருக்கும். மேலும் முறையாக கடனை திருப்ப செலுத்தும் போது, வரிவிலக்கு அளிக்கப்படுவதோடு, அபராதமும் இருக்காது. பலனும் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும். நீங்கள் கல்வி பயிலவும், வாழ்வின் முன்னேறுவதற்கும் பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக தான், இதுபோன்ற வங்கி கடனுதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இன்றைய தினம் வங்கி கடன் பெறும் அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் அனைத்து வங்கிகளைச் சார்ந்த மேலாளர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது, இந்திய நாடானது முழுவதும் அறிவு சார்ந்த நாடாக மாற வேண்டும், அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும், வங்கி கடனை அதிகப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என்று ஒவ்வொரு வங்கிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்த கடன் இலக்கை அடைய வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு இதனுடன் ஒருங்கிணைந்து மாணவ, மாணவியர்களுக்கு வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் வங்கிகளின் சேவை என்பது மிகவும் எளிமையாக உள்ளது. மேலும் கிராமங்கள் தோறும் வங்கிகளில் பயனாளிகள் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. கடனை உரிய முறையில் பெற்று சேர்ப்பது வங்கிகளின் பொறுப்பாகும். வங்கிகளில் கடனுதவியினை பெற்று திரும்ப செலுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைவதோடு, அந்த மாணவர் எதிர்காலத்தில் பிறருக்கு உதவி செய்யக் கூடிய ஒரு மாணவனாக மாறுகிறன். வங்கி கடன் பெற்று கல்வி பயில்கிறோம் என்றால் அதனை திரும்ப செலுத்தக்கூடிய பொறுப்பு பெற்றோர்களை விட அந்த மாணவனுக்கு தான் அதிகமாக உள்ளது. நீங்கள் முறையாக அக்கடனை திரும்ப செலுத்தும் போது, எதிர்காலத்தில் உங்களது சந்ததிகள் மட்டும் அல்லாமல், மற்ற மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றக் கூடிய வாய்ப்பாக அமையும். வங்கிகளில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. உலகளவில் இருக்ககூடிய தரவுகள் கூட ஒரே இடத்தில் எடுக்கக்கூடிய அளவிற்கு வங்கிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அதனப்படையில் வங்கிகளில் பெறும் கடனானது திரும்ப செலுத்துகிறோம் என்றால், நமது நாணயம் உயரும். சிபில் ஸ்கோர் என்பது உங்கள் கடன் தகுதியைக் குறிக்கும் எண்ணாகும். நீங்கள் பெறும் கடனை எவ்வளவு பொறுப்புடன் திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. கடனளிப்பவர்கள் உங்களது கடன் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய இந்த ஸ்கோரைப் பயன்படுத்துகிறார்கள். எனவே இன்றைய தினம் கடனுதவி பெறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். இம்முகாமில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ம.மலர்விழி, துணைப் பொது மேலாளர் ஜி.தாமோதரன், முதன்மை மேலாளர் (இந்தியன் வங்கி, நாமக்கல்) கௌரி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பேராசியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News