நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை;
நாமக்கல் அருகே சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னுடைய நான்கு வீடுகளை மகன் பெயருக்கு சொத்து வரி மாற்றம் செய்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன் மாநகராட்சி வருவாய் பிரிவு உதவியாளர் சங்கர்(58) என்பவரை தொடர்பு கொண்டு உள்ளார். அவர் ஒரு வீட்டுக்கு ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.இதனையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயி நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின்படி, ரசாயன பவுடர் கலந்த ரூபாய் நோட்டுக்களை விவசாயி எடுத்துச் சென்று, மாநகராட்சி அருகில் உள்ள தேநீர் கடைக்கு வருவாய் உதவியாளர் சங்கரை வரவழைத்து கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும், களவுமாக கைது செய்தனர். ரூ.20,000 பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்