தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் பயிற்சி வகுப்பு

அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 குறித்து ஒரு நாள் புத்தாக்க பயிற்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று வழங்கப்பட்டது.;

Update: 2025-12-24 02:34 GMT
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் பயிற்சி வகுப்பு இன்று (23.12.2025) நடைபெற்றது. பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 குறித்து ஒரு நாள் புத்தாக்க பயிற்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது மற்றும் அவற்றுக்கு எவ்வாறு தகவல்கள் வழங்க வேண்டும் என்பது குறித்தும், எந்தெந்த தகல்வகைள வழங்கலாம் அவற்றிற்கான அரசு விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News