திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ஆர். டிராபி 2025 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது
திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ஆர். டிராபி 2025 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதுதமிழகம் முழுவதும் இருந்து25 மாவட்டங்களைச் சேர்ந்த 220 அணிகளை சேர்ந்த 2220-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கால்பந்து வாலிபால் கூடை பந்து பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடினார்கள்;
கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கே எஸ் ஆர் டிராபி 2025 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் கல்வி நிறுவன விளையாட்டு அரங்கில் நடைபெற்றது போட்டிகளை கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே எஸ் ஆர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 25 மாவட்டங்களைச் சேர்ந்த 220 அணிகளை உள்ளடக்கிய 2220க்கும் மேற்பட்டவிளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினார்கள் 19 வயதுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடிய கால்பந்து கைப்பந்து கூடைப்பந்து மற்றும் பேட்மிட்டன் போட்டிகள் நடைபெற்றது கால்பந்து பிரிவில் 35 அணிகளும் வாலிபால் ஆண்கள் பிரிவில் 36 அணிகளும் பெண்கள் பிரிவில் 13 அணிகளும் கூடைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் 22 அணிகளும் பெண்கள் பிரிவில் 38 அணிகளும் பாட்மிண்டன் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 38 வீரர்களும் ஒற்றையர் பெண்கள் பிரிவில் 22 வீராங்கனைகளும் இரட்டையர் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும் இரட்டையர் பெண்கள் பிரிவில் 11 அணிகளும் விளையாடினர் நாக்கோட் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் பாட்மிண்டன் ஒற்றையர் பெண்கள் பிரிவில் நாமக்கல் A.மோக்க்ஷிதாமுதல் இடத்தைப் பிடித்து முதல் பரிசாக ரூ. 10,000 ரொக்க பணம் மற்றும் தங்கப்பதக்கம் சான்றிதழ்,கோப்பை பரிசாக பெற்றார் கோவையைச் சேர்ந்த நிக்சிந்தா சதீஷ்குமார்இரண்டாம் இடம் பிடித்தார் இவருக்கு 8000 ரொக்க பணம் வெள்ளி பதக்கம் மற்றும் சான்று கோப்பைபரிசாக பெற்றார் கோவையைச் சேர்ந்த மைதா மூன்றாம் இடம் பெற்று 5000 ரொக்கப் பரிசு வெண்கல பதக்கம் சான்று மற்றும் கோப்பை பரிசாக பெற்றார் இதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தர்மபுரியை சேர்ந்த ஆர் கே லக்ஷ்மன் முதலிடத்தையும் ஈரோட்டைச் சேர்ந்த கனிஷ்குமார் இரண்டாவது இடத்தையும்ஈரோட்டைச் சேர்ந்த ரோஹித் 3ஆம் இடத்தையும் பிடித்தனர் இவர்களுக்கு முறையே முதல் பரிசு பத்தாயிரம்,இரண்டாம் பரிசாக 8000 மூன்றாம் பரிசாக 5000 சான்று கோப்பை பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட்டது. பாட்மிண்டன்பெண்கள் இரட்டையர் பிரிவில்நாமக்கல் மூக்ஷிதா கோவை நிக்ஸிந்தாஜோடி முதல் பரிசையும் சென்னையைச் சேர்ந்த தன்யா ஸ்ரீ திருப்பூர் சேர்ந்த சமீரா ஜோடி இரண்டாம் இடத்தையும் திருப்பூரைச் சேர்ந்த சமிசா பானு கோயமுத்தூர் விவேகா விவேக்ஜோடி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.இவர்களுக்கு முறையே முதல் பரிசாக 10,000 இரண்டாம் பரிசாக 8000 மூன்றாம் பரிசாக 5000 மற்றும் பதக்கங்கள் சான்றுகள் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டதுஆண்கள் இரட்டையர் பிரிவில் நாமக்கல் எஸ் வி தர்ஷன் குமார் ஈரோடு வி என் ஹர்ஷத் ஜோடி முதல் இடத்தையும் விழுப்புரம் கோவிந்த் கிருஷ்ணன் கூடலூர் தினேஷ் குமார் ஜோடி இரண்டாம் இடத்தையும் சேலம் T. புஷ்பர்தாஸ் சேலம் D.விக்னேஷ்ஜோடி மூன்றாம் இடத்தையும் பிடித்தது இவர்களுக்கும் பெண்கள் பிரிவு போலவே ரொக்க பரிசுகள் சான்றுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டது.கூடைப்பந்து பெண்கள் பிரிவு போட்டியில் என் எஸ் டபிள்யூ பட்டிவீரன்பட்டி அணி முதல் இடத்தையும் தஞ்சாவூர் ஜெயின் ஜோசப் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது முதல் பரிசாக 25,000 இரண்டாம் பரிசாக 15,000 மூன்றாம் பரிசாக பத்தாயிரம் மற்றும் பதக்கங்கள் சான்றுகள் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது ஆண்கள் பிரிவில் திருவள்ளூர் டிவிஎஸ் அணி முதலிடத்தையும் சென்னை வேலம்மாள் அணி இரண்டாம் இடத்தில் கோவை சபர்பன் ஹையர் செகண்டரி ஸ்கூல் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது இவர்களுக்கும் பெண்கள் பிரிவை போலவே ரொக்கப் பரிசு பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கால்பந்து போட்டியில் மன்னார்குடி சக்தி ஃபுட்பால் கிளப் அணி YBRPAஅணி இரண்டாம் இடத்தையும் சேலம் அவராஞ்சி அம்மாள் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது இவர்களுக்கும் முதல் பரிசாக இருபத்தி ஐயாயிரம் இரண்டாம் பரிசாக 15,000 மூன்றாம் பரிசாக 10,000 பதக்கங்கள் கோப்பைகள் சான்றுகள் பரிசாக வழங்கப்பட்டது வாலிபால் பெண்கள் பிரிவில் ஆத்தூர் பாரதியார் ஹையர் செகண்டரி பள்ளி முதலிடத்தையும் ஈரோடு குமுதா ஹையர் செகண்டரி பள்ளி இரண்டாம் இடத்தையும் சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் ஹையர் செகண்டரி பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தது ஆண்கள் பிரிவில்கோவை SDATஅணி முதல் இடத்தையும் தஞ்சாவூர்SDAT அணிஇரண்டாம் இடத்தையும்ஈரோடு குமுதாஹையர் செகண்டரி பள்ளி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக இருவத்தையாயிரம் இரண்டாம் பரிசாக 15,000 மூன்றாம் பரிசாக 10,000 ரொக்க பரிசம் பழக்கங்களும் சான்றுகளும் கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களை சேர்ந்த முதல்வர்கள் வெங்கடேசன் உள்ளிட்டமுதல்வர்கள் இயக்குனர்கள் பேராசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்