நாமக்கல் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 39,375 பேர் பயன்!

சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.;

Update: 2026-01-10 15:01 GMT
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் இருபத்தியெட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 19 பேசிக் லைஃப் சப்போர்ட் வாகனங்களும் 8 அட்வான்ஸ் லைஃப் சப்போர்ட் அதி நவீன வசதிகளுடன் கூடிய வாகனங்களும் ஒன்று இங்குபேட்டர் வென்டிலேட்டர் கூடிய பச்சிளம் குழந்தை வாகனமும் செயல்பாட்டில் இருந்து வருகின்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர்களும் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இதைப் பற்றி சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு கூறுகையில்....வாகன விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 8380 பேரும், வாகனம் அல்லாத விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 3438 பேரும், மருந்து அருந்தியவர்கள் 2060 பேரும், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 3542 பேரும், பாம்பு மற்றும் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் 861 பேரும், ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 76 பேரும், அடிதடி 2279பேரும், நெஞ்சுவலி பாதிக்கப்பட்டவர்கள் 3088பேரும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேரும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 664 பேரும், இயற்கை பேரிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேரும், சுற்றுச்சூழலால் ஒருவரும், வலிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 1338 பேரும், தீராகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 1527 பேரும், தீ காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 15 பேரும், மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டவர்கள் 3064 பேரும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 958 பேரும், தற்கொலை முயற்சி 272 பேரும், சுயநினைவின்றி இருந்தவர்கள் 3438 பேரும், இயந்திரங்கள் விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேரும், கர்ப்பிணி பெண்கள் 3160 பேரும், 1 வயது முதல் 12 வயது முடிய இருக்கும் குழந்தைகள் 12 பேரும் பச்சிளங்குழந்தைகள் 249 பேரும், மற்றவை 957 பேரும், என மொத்தம் 39,375 பேர் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர்.இதில் பத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஆம்புலன்ஸ் குள்ளேயே பிரசவம் பார்த்தும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்று 17 பிரசவங்களும் பார்த்து அசத்தியுள்ளனர்.பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் நாமக்கல் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு என நாமக்கல் மாவட்டத்தில் வெண்டிலேட்டர் இன்குபேட்டருடன் கூடிய பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வரும் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் (நியூநேட்டல்) வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து பிறந்து 28 நாட்களுக்குள் ஆன பச்சிளங்குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து வர 108 என்ற இலவச அழைப்பை தொடர்பு கொண்டு இலவசமாக சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News