ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான ஆய்வு கூட்டம்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 தொடர்பாக முன்கூட்டியே வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், இப்பணியினை மேற்கொள்ளும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் தொடர்பாகவும், வாக்குச் சாவடி விழிப்புணர்வு குழு பணிகள் தொடர்பாகவும், மேலும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) கள விசாரணையை எளிமைப்படுத்தும் விதமாக எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கித் குமார் ஜெயின் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் உட்பட அனைத்து வட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.