வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-10-30 11:32 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950 ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிற பொருத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் கீழ்காணும் அட்டவணையின் படி அறிவித்தள்ளது. சிறப்பு தீவிரத் திருத்த கால அட்டவணை வ.எண் செயல்பாடு காலவரையறை 1 முன்னேற்பாடுகள் /பயிற்சி/அச்சடித்தல் 28.10.2025 (செவ்வாய்) முதல் 03.11.2025 (திங்கள்) வரை 2 கணக்கீட்டிற்கான காலம் 04.11.2025 (செவ்வாய்) முதல் 04.12.2025(வியாழன்) வரை 3 வாக்குசாவடி நிலையங்களை மறுசீரமைத்தல் - திருத்தியமைத்தல் 04.12.2025(வியாழன்)-க்குள் 4 கட்டுபாட்டு அட்டவணையை (control table) மேம்படுத்தல் மற்றும் வரைவு பட்டியலை தயாரித்தல் 05.12.2025 (வெள்ளி) முதல் 08.12.2025(திங்கள்) வரை 5 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 09.12.2025 (செவ்வாய்) 6 ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 09.12.2025 (செவ்வாய்) முதல் 08.01.2026 (வியாழன்) வரை 7 அறிவிப்பு கட்டம் (வழங்கல் விசாரணை மற்றும் சரிபார்ப்பு): கணக்கீட்டு படிவங்கள் மீதமான முடிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதமான தீர்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, இவை அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலரால் முடிக்கப்பட வேண்டிய தேதி 09.12.2025( செவ்வாய்) முதல் 31.01.2026(சனி) வரை 8 இறுதி வாக்காளர் பட்டியல் தர அளவுகளை சரிபார்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் ஒப்புதலை பெறுதல் 03.02.206 (செவ்வாய்) -க்குள் 9 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 07.02.2026 (சனி) இக்கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்தும் கேட்டறியப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடத்திட அனைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், , வாக்காளர் பதிவு அலுவலர்களான வருவாய் கோட்டாட்சியர்கள் பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), வே.சாந்தி (நாமக்கல்), மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் உட்பட அனைத்து வட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News