இது நம்ம ஆட்டம் 2026" மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று தொடங்கி வைத்தனர்.
இது நம்ம ஆட்டம் 2026" மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று தொடங்கி வைத்தனர்.;
இது நம்ம ஆட்டம் 2026" மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவான "இது நம்ம ஆட்டம் 2026" விளையாட்டுப் போட்டிகள் கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தடகளம், குண்டு எறிதல், கபாடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட், எறிப்பந்து மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் 16 வயது முதல் 35 வயது வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இன்று கபாடி, கயிறு இழுத்தல், வலைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் தனி நபர்கள் மற்றும் குழு அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தனி நபர்களுக்கும் ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.