தமிழக மக்கள் நலன் வேண்டியும், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டியும்தவெக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர். K.அருண்ராஜ் திருச்செங்கோட்டில் கிரிவலம், அன்னதானம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி தினத்தை ஒட்டி தமிழக மக்கள் நலன் வேண்டியும், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டியும் தவெக கொள்கை பரப்புச் செயலாளர். டாக்டர். K.அருண்ராஜ் கிரிவலம் மற்றும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்;
அரசியல் காரணத்திற்காக கிரிவலம் மேற்கொள்ளவில்லை பலமுறை திருச்செங்கோடு வந்துள்ளேன் இந்த முறை பௌர்ணமி தினம் என்பதால் கிரிவலத்தில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி உள்ளோம்.67 லிலும் 77 லிலும் நடந்ததைபோல் பாமரர்கள் படித்தவர்கள் பண்பாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் இட ஒதுக்கீடு உள்ள தொகுதிகள் அல்லாத பொது தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள்வேட்பாளராக ஆவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.அதிமுகவை சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல யார் நல்லவர்கள் யார் சிறந்த கொள்கை உடையவர்கள் என்பதை அறிந்தவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேர்கிறார்கள்.நிரந்தர முதல்வர் என்று சொல்வது நகைச்சுவை அல்ல 2026 தேர்தலில் த வெக மகத்தான வெற்றி பெறும் விஜய் முதல்வராவார் தொடர்ந்து நிரந்தர முதல்வராக இருப்பார் கிரிவலத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ் பேட்டி* திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் திருவண்ணாமலைக்கு நிகராக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம் அதன்படி மார்கழி மாத பௌர்ணமி தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் அருண்ராஜ் கிரிவளத்தில் பாதயாத்திரையாக நடந்து சென்றதோடு ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மலையடிவாரம் ஆறுமுகசாமிகோவிலில் சாமி தரிசனம் செய்து மரியாதையை ஏற்றுக் கொண்டுநெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு பின் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் கிரிவலம் தொடங்கினார். நாமக்கல் ரோடு சந்திப்பில் கிரிவலப் பாதை தொடங்கும் இடத்தில்அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதேபோல் மலையடிகுட்டைப் பகுதிகளும் வேலூர் ரோட்டில் ஒரு பகுதியிலும் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் அருண்ராஜ் கலந்து கொண்டு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு உணவுகளை வழங்கினார். அருண்ராஜ் கிரிவலம் வருவதை ஒட்டிவிஜயின் பேச்சுகள் ஒளிபரப்பவும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையிலும்அன்னதானம் வழங்கப்பட்ட மூன்று இடங்களிலும் எல்இடி திரைகள் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் எல்இடி தரை செயல்படவில்லை.அன்னதானம் நடைபெற்ற இடங்களிலோ அல்லது கிரிவலப் பாதைகளிலோ எங்கும் கட்சி கொடிகள் எதுவும் நடப்படவில்லை பேனர்கள் வைக்கப்படவில்லை மேம் அறக்கட்டளை என்கிற பேனர் ஒன்று மட்டும் வைக்கப் பட்டிருந்தது.ஆறுமுகசாமி கோவில் அருகில் கிரிவலம் தொடங்கிய தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த கிரிவலம் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும் விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் என வேண்டிய கிரிவலம் செல்கிறோம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம்.எனக்கூறினார் தொடர்ந்து செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக இந்த கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆனால் நீங்கள் இதுவரை கலந்து கொள்ளவில்லை இப்பொழுது அரசியல் காரணங்களுக்காக கிரிவலம் கலந்து கொள்கிறீர்களா என கேட்டபோது பலமுறை நான் திருச்செங்கோடு வந்திருக்கிறேன் கிரிவலம் செல்ல வேண்டிய வாய்ப்பு அப்போது உருவாகவில்லை என்று பௌர்ணமி தினத்தன்று வந்திருப்பதால் கிரிவலம் செல்கிறேன் கிரிவலம் செல்லும் போது பக்தர்களுக்கு எங்கள் வெற்றியையும் எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்கிற வேண்டுதலையும் வைத்து அன்னதானம் வழங்குகிறோம் அவ்வளவுதானே தவிர இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லைதெரிவித்தார் தொடர்ந்து 67 மற்றும் 77 போல் நாங்கள் ஆட்சியமைப்போம் என கூறுகிறீர்கள் 67 பாமரர்கள் ஏழைகள்குதிரை வண்டி ஓட்டுபவர்கள் சைக்கிள் கடைக்காரர்கள் டீக்கடைக்காரர்கள் போன்றவர்கள்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள் இதே போல் 77 இல் படித்தவர்கள் பண்பாளர்கள் பலரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள் அதுபோல் உங்கள் கட்சியிலும் நடக்குமா என செய்தியாளர்கள் கேட்டபோது நிச்சயம் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என கூறினார் தொடர்ந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உங்கள் கொள்கை என கூறும் நீங்கள் இட ஒதுக்கீடு இல்லாத தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளராக அறிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் நிச்சயம் இதையெல்லாம் நடக்கும் நாங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்போம் என கூறினார் அதிமுகவிலிருந்து பலரும் உங்கள் கட்சியில் வந்து சேர்வதால் அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியது போல் தான் உள்ளது என கேட்டதற்குஅப்படியெல்லாம் இல்லை எங்கள் கொள்கை பிடித்தவர்கள் எங்களை பிடித்தவர்கள் எங்கள் வெற்றியை உறுதி செய்தவர்கள் யாருடன் இருந்தால் நல்லது என நினைத்தவர்கள் எங்களை நாடி வருகிறார்கள் நாங்கள் அரவணைத்து செல்கிறோம் என கூறினார் மேலும் இன்று கூட திருச்செங்கோடு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஒன்றிய பெருந்தலைவர் இருந்த பாலசுப்பிரமணியம் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார் எனக்கு கூறினார்தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர்கள் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவிர வேறு யாரும் பெரிய பிரமுகர்கள் வராத நிலையில் அமமுகவுக்கு,ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தான் உங்கள் கட்சியில் இணைகிறார்கள் இது எப்படி அண்ணா திமுகவிலிருந்து வருவதாகவும் எனக் கேட்டபோது அதிமுகவில் சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல எங்களை நாடி வருபவர்களை அரவணைத்து செல்கிறோம் அவ்வளவுதான் அவர்களும் அதிமுகவில் இருந்தவர்கள் தான் என கூறினார்.திமுக தான் எங்கள் அரசியல் எதிரி என திமுகவை ஊழல் கட்சி எனக் கூறும் நீங்கள் ஊழல் புகாரில் சிறை தண்டனை பெருமளவுக்கு போன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றியோ அதிமுகவின் ஊழலைப் பற்றியோ பேசுவதில்லையே ஏன் எனக் கேட்டபோது இது குறித்து ஏற்கனவே பேசி ஆகிவிட்டது என கேள்வியை தவிர்த்தார்.தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என தாவிக்கை நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்ததை குறித்து கேட்டபோது அமைச்சர் சாமிநாதன் இது நகைச்சுவையாக உள்ளது எனக் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவருக்கு வேண்டுமானால் இது நகைச்சுவையாக இருக்கலாம் வரும் 2026 தேர்தலில் தாவீகா மகத்தான வெற்றி பெறும் எங்கள் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வருவார் தொடர்ந்து நிரந்தரம் முதல்வராக இருப்பார் எனதெரிவித்தார்.நிகழ்ச்சி என்பது கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் உடன் இருந்தனர்