வளத்தி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து 21 பேர் படுகாயம்

மினி லாரி கவிழ்ந்து விபத்து 21 பேர் படுகாயம்

Update: 2025-01-18 04:24 GMT
வளத்தி அடுத்த மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த இனியன், 20; இவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து நேற்று முன்தினம் காலையில் காணும் பொங்கலை முன்னிட்டு மினி லாரியில், மயிலம், திருவக்கரை தீவனுார் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று மீண்டும் மாலை 6:30, மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.செஞ்சியிலிருந்து சேத்பட் செல்லும் சாலையில், அன்னமங்கலம் கூட்ரோடு அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த சோலை, 53, அஸ்வின், 15; கயல்விழி, 22; உள்ளிட்ட 21 பேர் காயமடைந்து, செஞ்சி , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரவிக்குமார், 43 மீது வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன

Similar News