நாமக்கல்லில் ஜனவரி-21 புதன்கிழமை கரண்ட் கட்!

நாமக்கல்லில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2026-01-20 15:54 GMT
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை (ஜனவரி 21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வசந்தபுரம், வேப்பனத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓஎஸ் காலனி, வீசானம் ,சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

Similar News