தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 213 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி வழங்கி பேசினார்;

Update: 2026-01-14 07:10 GMT
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி முன்னால் சேர்மன் செல்வராஜ் ஏற்பாட்டில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொ) பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் துரைராஜ், கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷ்குமார், கல்லூரியின் துறைத் தலைவர்கள் ஜோதிலெட்சுமி, பத்மநாபன், மணிவாசகம், நிதியாளர் கோவிந்தசாமி,முன்னால் ஒன்றிய கவுன்சிலர் கோமதிபிரபாகரன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்று வரும் 213 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணிணியை வழங்கி பேசினார்.அப்போது அவர் பேசும்போது: கிராப்புற மாணவ மாணவியர்கள் உயர் கல்வியில் பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கல்லூரியானது நகரங்களை காட்டிலும், நவீன வசதிகளுடன் அனைத்து அம்சங்களும் கொண்ட புதிய கட்டிடமானது சுமார் 13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் முதல்வர் கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளார். இதேபோல் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்களது எதிர்காலங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு, மடிக்கணிணி மிக முக்கியம் என்று உணர்ந்த நமது முதல்வர் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் 20 லட்ச மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணிணி வழங்கி உள்ளார். மேலும் கல்லூரி மாணவ மாணவியர்கள் உயர் கல்வி பயில வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். மேலும் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து 40 சதவீதம் வரை வழங்கி வருகிறார். கல்வி வளர்ச்சியில் இந்தியா அளவில் 2வது இடத்திற்கு நமது தமிழ்நாடு வளர்ந்து உள்ளது. இதேபோல் உள்ளாட்சித்துறையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி உள்ளார். மேலும் பெண்கள் உயர வேண்டும் என்று பெண்கள் சுய உதவிக்குழு உருவாக்கியதன் விளைவாக இன்று பெண்கள் 51 சதவீத வேலை வாய்ப்புகளோடு முன்னேறி வருகின்றனர். நமது முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 51 பேர் ஐஏஎஸ் பணிக்கு தேச்சி பெற்று உள்ளனர். இதேபோல் கல்லூரி முடிக்கும் மாணவ மாணவியர்கள் கரூரில் முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பாக வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயின்ற ஏராலமான மாணவ மாணவியர்கள் அரசு வேலைக்கு சென்று உள்ளனர். ஆகவே அதனை பயன் பெற விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஆகவே அனைத்து மாணவ மாணவியர்களும் நன்றாக பயின்று நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல பெயரை எடுத்து வளர்ச்சி பெறவேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் கண்காணிப்பாளர் ரம்யா, முன்னால் மாவட்ட கவுன்சிலர் கஸ்தூரி தங்கராஜ், முன்னால் துணை சேர்மன் அழகர், நிர்வாகிகள் பழனியப்பன், பென்னுச்சாமி, இளவரசன், மணிகண்டன், வேல்முருகன், ஆனந்த், அபு, நாகராஜ், செந்தமிழ் உள்பட கல்லூரியின் உதவி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News