கந்தர்வகோட்டை அருகே ரூ.2.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம்; முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைப்பு!!

கந்தர்வகோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2,15,0000 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.;

Update: 2025-12-22 07:03 GMT

கந்தர்வகோட்டை தாலுக்கா குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2,15,0000 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ஒரு வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் அருணா, திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா, கோவில் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் மா.தமிழ் ஐயா , மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ந.அம்பிகாவதி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News