நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது! செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைப்பெறுகிறது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக 9 நாட்கள் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படும்.;
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 22ம் தேதி திங்கட்கிழமை தொடங்கியது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக 9 நாட்கள் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படும். வரும் 1ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, நாமக்கல் நரசிம்மர் கோயிலில் செப்டம்பர் 22 திங்கட்கிழமை மச்ச அவதாரம் , செப்டம்பர் 23 செவ்வாய்க்கிழமை கூர்ம அவதாரம், செப்டம்பர் 24 புதன்கிழமை வாமன அவதாரம்,செப்டம்பர் 25 வியாழக்கிழமை ரங்கமன்னார் திருக்கோலம்,செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை ராமாவதாரம், செப்டம்பர் 27 சனிக்கிழமை கிருஷ்ணவதாரம், செப்டம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை பரமபதநாதர் அலங்காரம், செப்டம்பர் 29 திங்கட்கிழமை மோகன அவதாரம், செப்டம்பர் 30 செவ்வாய்கிழமை ராஜாங்கசேவையில் சுவாமி அருள்பாலிக்கிறார்.அக்டோபர் 1 புதன்கிழமை நாமக்கல் குளக்கரையில் அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் எழுந்தருளி அம்பு விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அக்டோபர் 2 வியாழகிழமை விசேஷ திருக்கோலம் ஆகியவை நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல், லலிதா சகஸ்ரநாம பாராயணம், பரதநாட்டியம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்/ செயல் அலுவலர் இளையராஜா, அறங்காவலர் குழுத்தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், ராம சீனிவாசன், டாக்டர் மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.