கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 22.23 கோடி மதிப்பீட்டில் 35 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 22.23 கோடி மதிப்பீட்டில் 35 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.;

Update: 2026-01-27 10:31 GMT
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 22.23 கோடி மதிப்பீட்டில் 35 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.22.23 கோடி மதிப்பீட்டில் 35 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.  பிறகு அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய செந்தில் பாலாஜி கிரமப்புரங்களை நகர்ப்புரத்திற்கு இணையாக மேம்படுத்தும் வகையில், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கிரமப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு பணிகளாக நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம், கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் மற்றும் சிறு கனிம நிதி திட்டத்தின் கீழ் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காதப்பாறை ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகளையும், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, ஆவரங்காட்டுர் பகுதியில் சிமெண்ட் சாலையும், புதிய கிராம நிர்வாக அலுவல கட்டிடமும், சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகளையும், நெரூர் வடபாகம் மற்றும் தென்பாகம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகளையும், சக்தி நகரில் மழை நீர் வடிகால் அமைத்தல் பணிகளையும், புதுப்பாளையம் மற்றும் ரெங்கநாதன் பேட்டையில் ஒரு வழித்தட சாலையை, இருவழித்தட சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதலும்,சோமூர் ஊராட்சியில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை மற்றும் சமுதாயக்கூடம் அமைத்தல் பணி, அச்சமாபுரத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டிடம் கட்டும் பணி, கல்லுப்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைத்தல் பணிகளையும், திருமுக்கூடலூர் மற்றும் சோமூர் புளியமர பேருந்து நிறுத்திலிருந்து ஒரு வழித்தட சாலையை, இருவழித்தட சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணி என மொத்தம் ரூ.22.23 கோடி மதிப்பீட்டில் 35 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News