சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி மறைவு! கொல்லிமலையில் நாளை (அக்டோபர் 23) வெள்ளிக்கிழமை மதியம் இறுதிச்சடங்கு!-கே.ஆர்.என் . இராஜேஸ்குமார் எம்பி தகவல்
அக்டோபர் -23 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேல் கொல்லிமலையில் உள்ள பொன்னுசாமி எம்எல்ஏ தோட்டத்தில் உரிய அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்;
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கே. பொன்னுசாமி அவர்களின் இறுதி சடங்கு நாளை அக்டோபர் -23 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேல் கொல்லிமலையில் உள்ள பொன்னுசாமி எம்எல்ஏ தோட்டத்தில் உரிய அரசு மரியாதையுடன் நடைபெறும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உட்பட அரசு அதிகாரிகள் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.