நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் வரும் 27-ம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 13 ம் தேதி திருச்சி, அரியலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் முதல்முறையாக பரபரப்புரை மேற்கொண்டார்.;

Update: 2025-09-22 14:56 GMT
இந்த நிலையில் நாகை, திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட சூழ்நிலையில் வரும் 27ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். குறிப்பாக நாமக்கல் மாநகரில் மூன்று இடங்களானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் சாலையில் உள்ள கே. எஸ் தியேட்டர், பொய்யேரிகரை மதுரை வீரன் கோவில், பூங்கா சாலை என மூன்று இடங்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராசிபுரம் ஆண்டலூர் கேட் மற்றும் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் காவல்துறையினரின் முழுமையான அனுமதி வழங்கப்படும் எனவும் இந்த பரப்புரைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்தும் தெரியவரும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 27 ஆம் தேதி விஜய் நாமக்கல் வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News