பரமத்திவேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2,700-க்கு ஏலம்.

பரமத்திவேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2,700-க்கு ஏலம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2025-12-01 12:43 GMT
பரமத்தி வேலூர், டிச.1:   நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,800, சம்பங்கி கிலோ ரூ. 200, அரளி ரூ. 200, பன்னீர் ரோஜா ரூ. 140, பச்சை முல்லைப்பூ ரூ. 1,000, வெள்ளை முல்லைப்பூ ரூ. 800, செவ்வந்திப்பூ ரூ. 140, கனகாம்பரம் ரூ. 700, கலர் ரோ ரூ. 240, ஜாதிமல்லிகை ரூ. 700-க்கும், காக்கட்டான் ரூ. 700-க்கும் ஏலம் போனது.   இந்தவாரம்  நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 2,700, சம்பங்கி ரூ.100, அரளி ரூ. 260, பன்னீர் ரோஜா ரூ. 200, பச்சை முல்லைப்பூ ரூ. 1,600, வெள்ளை முல்லைப்பூ ரூ. 1,300, செவ்வந்திப்பூ ரூ. 180, கனகாம்பரம் ரூ. 1,000, கலர் ரோஜா ரூ. 340, ஜாதி மல்லிகைப் பூ ரூ. 1,200, காக்கட்டான் கிலோ ரூ. 1,200-க்கும் ஏலம் போனது. பூக்களின் வரத்து குறைவாலும், முகூர்த்த நாள்கள் அதிகம் என்பதாலும் பூக்களின் விலை உயந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்ந்ததால் பூக்களை பயிர்செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News