நாமக்கல்லில் 29 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவிகள்.
பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.;
ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கி மகிழ்ந்தனர்நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996-ம் ஆண்டு பயின்ற மாணவிகள் 29 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 1996 ம் ஆண்டு நினைவுகளும், நன்றிகளும் என்ற தலைப்பில், பள்ளியின் முன்னாள் மாணவிகள் சந்தித்து தங்கள் பள்ளிக் கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் மேலும் தாங்கள் பயின்ற பள்ளியில் ஆசிரியர்கள் அளித்த ஊக்குவிப்பு, கண்டிப்பு, சக தோழியாக நட்பு பாராட்டியது என பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது, முன்னாள் மாணவிகள், தங்கள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி, அவர்களிடம் பிரம்பால் கையில் லேசாக அடி வாங்கி, தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். ஆசிரியர்கள் அன்று அளித்த ஊக்குவிப்பு மற்றும் கண்டிப்பு காரணமாகத்தான் இன்று நாங்கள் நல்ல நிலையில் உள்ளதாக ஆசிரியர்களிடம் முன்னாள் மாணவிகள் நன்றி பெருக்குடன் சந்தோசமாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் மேலும் மாணவிகள் ஒருவருக்கொருவர் ஆரத்ததழுவி தங்கள் அன்பை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் ஆசிரியர்கள் 40 பேர், முன்னாள் மாணவிகள் 150 பேர் பங்கேற்றனர்.