கள்ளக்குறிச்சி: டிசம்பர் 29,2025ம்தேதி வாகனம் ஏலம்அறிவிப்பு....

கள்ளக்குறிச்சி மாவட்டண காவல்துறை வாகன பொது ஏலம் அறிவிப்பு;

Update: 2025-12-24 00:11 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)–ன் படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 3 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் 29 இருசக்கர வாகனங்கள் மொத்தம் 33 வாகனங்கள் 29.12.2025-ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் – 1,000/- மும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் – 2,000/-மும், 29.12.2025-ம் தேதி காலை 08.00 மணிக்கு ஏலம் நடைபெறவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் வைத்து செலுத்த வேண்டும். முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் ஏலத்தில் கலந்து கொண்டு டோக்கன் பெறும் ஒவ்வொருவரிடமும் ஏலம் விடும் செலவிற்கு 100 ரூபாய் பெறப்படும். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் 29.12.2025-ம் தேதி திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகையுடன் 18 விழுக்காடு (GST)-யும் சேர்த்து கூடுதலாக செலுத்தப்பட வேண்டும். மேற்கண்ட வாகனங்களில் வாகன உரிமையாளர் ஏலத்தில் கலந்து கொள்ளும் சமயத்தில் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம் மாவட்ட காவல் அலுவலகம் – கள்ளக்குறிச்சி மாவட்டம் தொலைபேசி எண் – 9042417209, 04151 - 220260

Similar News