இந்திய விடுதலைக்காக முதலில் போராடிய பெண் அரசி என போற்றப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் 296 வது பிறந்தநாள் தவெகவினர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

வீரமங்கை வேலு நாச்சியாரின் 296 வது பிறந்தநாளை ஒட்டிதிருச்செங்கோடு நகர தமிழக வெற்றிக் கழக அலுவலக த்தில்வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட தவெகநிர்வாகிகள் மகளிர் அணியினர்மலர் தூவி மரியாதை;

Update: 2026-01-03 15:01 GMT
பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையனை எதிர்த்து போராட்டம் நடத்தியஇந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என போற்றப்படும் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் 296 வது பிறந்தநாள் விழா திருச்செங்கோடு சேலம் ரோட்டில் உள்ள நகர தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை வழிகாட்டிகளாக கருதப்படுபவர்கள்ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் திரு உருவப் படத்திற்கு தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் நேற்றுதமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திருச்செங்கோடு ஒன்றிய அதிமுக செயலாளராகஇருந்தவரும் ஒன்றிய குழு பெருந்தலைவராக இருந்தவருமான பாலசுப்பிரமணியம் மாவட்ட மாணவரணி செயலாளர் ஹரி, திருச்செங்கோடு நகரச் செயலாளர்கள் இப்ராஹிம், நாகராஜ், திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் குணா, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், நகர மகளிர் அணி செயலாளர் மணிமேகலை ஆகியோர் உள்ளிட்டதமிழ்நாடு வெற்றிக் கழக நிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

Similar News