கோரையாறு பகுதியில் தனியார் பேருந்து - லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அஞ்சலி
கோரையாறு பகுதியில் தனியார் பேருந்து - லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அஞ்சலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோரையாறு வளைவுப்பகுதியில் நேற்று இரவு தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இந்த விபத்தில், தனியார் பேருந்து ஓட்டுனர் ரவி (55), ஆத்தூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வகுமார் (55), ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பயணி அலமேலு (57) உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தனியார் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் படுகாயம் அடைந்தனர். கோர விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், ராசிபுரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மூன்று பேரில் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். விபத்தில் உயிரிழந்த உறவினர்களிடம் ஆறுதல் கூறி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில விவசாய அணி இணை செயலாளர் DS சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் RSR மணி, இணையச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.